×

அலங்காநல்லூர் கோயிலில் மழை பெய்ய வேண்டி வருண ஜெப யாக வேள்வி

அலங்காநல்லூர், செப். 13: மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அதிக மழைப்பொழிவு காரணமாக நெல் உள்ளிட்ட பல்வேறு விவசாய பணிகள் சிறப்பாக நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டு பருவமழை பொய்த்ததன் காரணமாக விவசாய பணிகள் முடங்கியுள்ளது. இதனால் விவசாயிகளும், விவசாயத்தை நம்பியுள்ள தொழிலாளர்களும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பருவ காலத்தில் மழை பெய்து விவசாய பணிகள் சிறப்பாக நடைபெற வேண்டி அலங்காநல்லூர் சாஸ்தா ஐயப்பன் ஆலயத்தில் சிறப்பு வருண ஜெப யாக வேள்வி பூஜை நேற்று நடைபெற்றது. முன்னதாக ஆலயத்தின் முன்புள்ள தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டது. தொடர்ந்து அர்ச்சகர்கள் தண்ணீருக்குள் இறங்கி முல்லை பெரியாறு, வைகை, சாத்தையாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி சிறப்பு வர்ண ஜெப யாக வேள்வி பூஜை செய்தனர். ஏற்பாடுகளை ஐயப்பன் கோயில் நிர்வாகி சீனிவாசன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

The post அலங்காநல்லூர் கோயிலில் மழை பெய்ய வேண்டி வருண ஜெப யாக வேள்வி appeared first on Dinakaran.

Tags : Varuna ,Alankanallur ,Madurai ,Dinakaran ,
× RELATED மழை வேண்டி வருண யாகம்